Monday, October 12, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் தொழில்நுட்பம் வணிகம் கல்வி & வேலை விளையாட்டு வாகனம் உலகம் குழந்தை வளர்ப்பு உடற்பயிற்சி BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
சமையல்

அசத்தலான கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்!!!

அசத்தலான கேரளா ஸ்டைல் இறால் ரோஸ்ட்!!!

Kerala Prawn Roast Recipe in tamil: சிக்கன், மட்டன் மட்டும் சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்படியெனில், இந்த வாரம் இறால் செய்து சுவைக்கலாமே. அதிலும், கேரளா ஸ்டைலில் அசத்தலான இறால் ரோஸ்ட் செய்தால், வீட்டில் அனைவரது பாராட்டு மழையிலும் நனைவீர்கள். இந்த ரெசிபி செய்வது சுலபம் தான். அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை இப்போது பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

இறால் ஊற வைப்பதற்கு

  • இறால் - கால் கிலோ
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும்.
  • பின்பு அந்த இறாலில் ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி தனியாக ஊற வைக்கவும்.
  • அதன் பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • அத்துடன், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாகள் அனைத்தையும் சேர்த்து சில நொடிகளுக்கு வதக்கவும்.
  • அடுத்ததாக, அதில் ஊற வைத்த இறாலை சேர்த்து நன்கு சில நிமிடங்கள் கிளறி விடவும்.
  • பின், அடுப்பை குறைவான தீயில் வைத்து சில நிமிடங்களுக்கு இறாலை வேக விடவும்.
  • இறால் நன்கு வெந்ததும், அடுப்பை அதிக தீயில் வைத்து, இறாலை நன்கு பொன்னிறமாக ரோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட் ரெடி.

Image Courtesy: yummytummyaarthi

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி!!!

அட்டகாசமான சுவையில் முட்டை கபாப்!!!

ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி!!!

Share this article

R

Rajasekar

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

…

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

…

…

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,880
தங்கம் (24k)
1 கிராம்
₹14,574
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை செய்முறை: சுவையான காலை உணவு ரகசியம் வாசிக்க →