Monday, October 12, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் தொழில்நுட்பம் வணிகம் கல்வி & வேலை விளையாட்டு வாகனம் உலகம் குழந்தை வளர்ப்பு உடற்பயிற்சி BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
சமையல்

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி!!!

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி!!!

அசைவ பிரியவர்களில் சிக்கன் ரெசிபி பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும், ஹோட்டல் ஸ்டைலில் வித்தியாசமான எதாவது வீட்டிலேயே செய்து கொடுத்தால், இனி எப்போதும் வீட்டு சாப்பாட்டை மட்டுமே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் வைப்பது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக, க்ரீன் சிக்கன் கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் உங்களைப் பாராட்டி தள்ளுவார்கள். குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் க்ரீன் சிக்கன் கிரேவி செய்முறையை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் - 1 கிலோ
  • வெங்காயம் - 1 (நறுக்கியது)
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • சோம்பு - 1/2 டீஸ்பூன்

அட்டகாசமான சுவையில் முட்டை கபாப்!!!

  • தயிர் - 1/4 கப்
  • கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
  • எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

  • கொத்தமல்லி - 1 கட்டு
  • புதினா - 1/2 கட்டு
  • பச்சை மிளகாய் - 4-5
  • சின்ன வெங்காயம் - 3
  • இஞ்சி - 1 1/2 இன்ச்
  • பூண்டு - 7-8 பல்

ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி!!!

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து, அத்துடன் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி சுமார் அரை மணிநேரத்திற்கு ஊற வைக்கவும்.
  • பின்பு அரைப்பதற்கு தேவையான பொருட்களை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின்னர் அரைத்த மசாலாவை அத்துடன் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விடவும்.
  • அடுத்து அதில் தயிர், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • ஊற வைத்த சிக்கனை இப்போது மசாலா கலவையுடன் சேர்த்து குறைந்தது 3 நிமிடத்திற்கு வதக்கவும்.
  • பின் அதில் தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கிளறி, 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி தயார்.

சிக்கன் சிந்தாமணி!!!

பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு!!!

குழந்தைகளுக்கு பிடித்தமான பாசிபருப்பு கட்லெட்!!!

Share this article

R

Rajasekar

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

…

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

…

…

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,880
தங்கம் (24k)
1 கிராம்
₹14,574
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை செய்முறை: சுவையான காலை உணவு ரகசியம் வாசிக்க →