Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
சமையல்

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் ரசம்!!!

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் ரசம்!!!

மட்டன் ரசம் சாப்பிட்ட அனுபவம் உண்டா? எப்போது வீட்டில் மட்டன் எடுக்கிறீர்களோ அப்போது இதை செய்து பாருங்கள். மிகவும் சுலபம் தான். ஆனால், நிச்சயம் இது அனைவருக்கும் பிடிக்கும். உடல் நிலை சரியில்லாத போது அல்லது சளி பிடித்திரும் போது இந்த ரசம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதோடு, சளி தொல்லையில் இருந்து விடுபடலாம். பேச்சுலர்ஸ் கூட இதனை ட்ரை செய்து பார்க்கலாம். வாருங்கள் இப்போது செட்டிநாடு ஸ்டைல் மட்டன் ரசம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

மட்டன் – லல1/2 கிலோ

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

தக்காளி – 1 (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க…

சின்ன வெங்காயம் – 4 (தோலுரித்து நக்கியது)

பூண்டு – 6 பல்

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

செய்முறை

*முதலில், மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை குக்கரில் போட்டு, 2 கப் நீர் சேர்த்து மூடி அடுப்பில் வைக்கவும்.

*குக்கர் 10 விசில் விட்டவுடன், அடுப்பை மிதமான தீயில் ஒரு 10 நிமிடத்திற்கு வைத்து விட்டு, பின்னர் குக்கரை இறக்கி விடவும்.

*குக்கர் ப்ரஷ் தானாக அடங்கிய பிறகு குக்கரை திறந்து, மட்டனையும், நீரையும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.

*வேக வைத்த மட்டனை வறுவல் எதாவது செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது ரசம் வைக்க மட்டன் வேக வைத்த நீர் மட்டுமே போதும்.

*இப்போது, அரைக்க தேவையான பொருட்கள் மிக்ஸர் ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

*அடுத்ததாக, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.

*அத்துடன், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.

*இப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

*அடுத்ததாக, மட்டன் வேக வைத்த நீரை சேர்த்து கொதிக்க விடவும்.

*ரசம் கொதிக்க தொடங்கியவுடன், அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கிடலாம்.

*இந்த ரசம் மிகவும் ருசியானதாகவும், அனைவருக்கும் பிடித்த மாதிரியாகவும் இருக்கும். நிச்சயம் செய்து பாருங்கள்…

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை வாசிக்க →