Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

சரும வறட்சி முதல் கருவளையம் வரை அனைத்தையும் சரி செய்ய இது ஒன்று போதும்...

சரும வறட்சி முதல் கருவளையம் வரை அனைத்தையும் சரி செய்ய இது ஒன்று போதும்...

முகத்தை அழகாக மாற்ற, பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். செலவே இல்லாமல் அழகை மேருகேற்ற இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் தான் கற்றாழை. உண்மையில், கற்றாழை மருத்துவ குணங்களுக்கும் அழகு நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. இந்த தாவரத்தில் இருக்கக்கூடிய ஜெல்லில் வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள், சாலிசிலிக் அமிலம், லிக்னின், சபோனின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற கூறுகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பளபளக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல்லை எந்த வகையான சருமத்திற்கு பயன்படுத்தினாலும் அனைத்து விதமான சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். நீங்கள் கற்றாழை ஜெல்லை பல்வேறு வழி முறைகளில் பயன்படுத்தலாம். இது ஒரு சீரான மாசுமருவற்ற தோல் மற்றும் பளபளப்பான சருமத்தை தரக்கூடியது. இதற்கு, நீங்கள் அதை ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் மற்றும் கிரீம் வடிவில் கூட பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

வறண்ட சருமம்

கற்றாழை ஜெல் சுமார் 95% தண்ணீரால் ஆனது. இந்த ஜெல் சருமத்திற்கு சிறந்த ஈரப்பதமூட்டும் நன்மைகளை வழங்குகிறது. இது முகத்தைப் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவிடும். கற்றாழையில் உள்ள சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். இதனால், சரும வறட்சியைத் தடுக்கவும். மேலும், சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்த உதவும். வறண்ட சருமம் உள்ளவர்கள் தொடர்ச்சியாக கற்றாழை பயன்படுத்தி வர அந்த பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

கருவளையம்

கண்களை சுற்றிலும் இருக்கக்கூடிய கருவளையங்கள் ஒட்டுமொத்த அழகையும் கெடுக்கும் விதமாக இருக்கும். அப்படிப்பட்ட கருவளையங்களைப் போக்க கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள பகுதிக்கு நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும், அதன் பயன்பாடு உங்கள் சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது.

சரும அரிப்பு

கற்றாழை ஜெல் அழற்சி எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. இது சூரிய ஒளி, சொறி, தொற்று, சிவத்தல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்திட உதவுகிறது. மேலும், அதன் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் சொறி மற்றும் வெடிப்புகளைக் குறைக்க உதவிடும். இந்த ஜெல்லைப் பயன்படுத்துவது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதால், அரிப்புகள் பிரச்சனைகள் விரைவில் குணமடையும்.

வயதான தோற்றம்

சிலருக்கு 30 வயது தொடக்கதிலேயே முகத்தில் சுருக்கம் விழ தொடங்கும். இது ஒருவிதமான சங்கடத்தை அளிக்கும். குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சனை தர்மசங்கடமான ஒன்றாக இருக்கக்கூடும். கற்றாழை ஜெல், மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் அல்லது தோல் தளர்ச்சி போன்ற வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்த ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. எனவே, இது முகத்தில் தெரியும் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைத்திட உதவிடும். இது தவிர, இறந்த சரும செல்களை அகற்றுவதன் மூலம் சருமத்திற்கு முன்கூட்டிய வயதான தோற்றத்தையும் தடுத்திடலாம்.

சரும வீக்கம்

கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த ஜெல்லில் உள்ள சாலிசிலிக் அமிலம் துளைகளை அடைக்க உதவுகிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது. எனவே, சருமத்தில் அழற்சியால் ஏற்படக்கூடிய வீக்கத்தை உடனே குறைத்திட கற்றாழை உதவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →