Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

வலுவான, அடர்த்தியான கூந்தலைப் பெற வெங்காயத்தாளை இப்படி யூஸ் பண்ணுங்க...

வலுவான, அடர்த்தியான கூந்தலைப் பெற வெங்காயத்தாளை இப்படி யூஸ் பண்ணுங்க...

இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே ஏதோ ஒரு வரை கூந்தலை பிரச்சனையால் அவதியுறுகின்றனர். சிலருக்கு அதிகப்படியான கூந்தல் உதிர்வு, கூந்தல் உடைவு, இளநரை, வலுக்கை போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. இதற்கு அதிக விலை கொடுத்து கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதில் இயற்கை முறைகளைப் பின்பற்றினால் சிறந்த முடிவுகளைப் பெற்றிடலாம். அந்த வகையில், அடர்த்தி இல்லாமல் மெலிந்து காணப்படும் கூந்தல் முதல் வலுவிழந்த கூந்தல் வரை அனைத்திற்கும் சிறந்த தீர்வினைத் தரக்கூடியது தான் வெங்காயத்தாள். வெங்காயத்தாளை கீழே குறிப்பிடப்பட்டள்ள படி உபயோகித்து வந்தால் பளபளக்கும் வலுவான கூந்தலையும், அடர்த்தியான கூந்தலையும் பெற்றிடலாம். தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் வெங்காயத்தாளில் இயற்கையாகவே உள்ளன. சரி வாருங்கள். வெங்காயத்தாளை எவ்வாறு பயன்படுத்துவது, அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்…

அடர்த்தியான கூந்தல்

உங்கள் கூந்தல் உயிரற்றதாகவும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தால் வெங்காயத்தாளை அரைத்து, அதனை உருளைக்கிழங்கு சாறுடன் கலந்து கூந்தலில் தடவ வேண்டும். உண்மையில், இது தலையின் சருமத்தை ஆரோக்கியமாக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது எந்த வகையான தலைமுடி பிரச்சனைகளையும் சமாளிக்க உதவிடும். மேலும், உங்கள் முடியை வேகமாக அடர்த்தியாக மாற்ற உதவும்.

பொடுகு தொல்லையைப் போக்கும்

வெங்காயத்தாளைத் தடவினால் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனை நீங்கும். உண்மையில், இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இது முடியில் உள்ள அழுக்குகளால் ஏற்படும் பாக்டீரியாவைக் குறைத்து, பூஞ்சை தொற்றுகளைக் குறைக்க உதவும்.

முடிக்கு ஊட்டமளிக்கும்

ஊட்டசத்துகள் நிறைந்த கூந்தலை பெற வேண்டுமெனில், வெங்காயத்தாளை அரைத்து அதனுடன் ஒரு முட்டை மற்றும் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது அதை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து அலசிடவும். இது உங்கள் தலைமுடியில் புரதத்தின் அளவை அதிகரித்து, கூந்தலுக்கு மேலும் ஊட்டமளிக்கும்.

கற்றாழையுடன் வெங்காயத்தாள்

உங்களது கூந்தல் வேர் முதல் நுனி வரை வலுவாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதற்கு வெங்காய இலைகளை அரைத்து, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தலைமுடியில் தடவி வரவும். இப்படி செய்வதால், முடிவின் வேர்களை வலிமையாக்கி கூந்தலுக்கு பொலிவு சேர்க்கும். வெங்காயத்தாளை பயன்படுத்துவது கூந்தலுக்கு மட்டுமின்றி, தலை சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

சீரம் மற்றும் ஹேர் பேக்

வெங்காயத்தாளை அரைத்து சாறு எடுத்து, அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் விரும்பினால், நீங்கள் அதில் ஆலிவ் எண்ணெயையும் சேர்க்கலாம். அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வர அடர்த்தியான கூந்தலையும், ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலை நிச்சயம் பெற்றிடலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →