Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

பட்டு போன்ற மென்மையான கைகள் வேணும்னா இந்த 2 பொருள யூஸ் பண்ணுங்க போதும்…

பட்டு போன்ற மென்மையான கைகள் வேணும்னா இந்த 2 பொருள யூஸ் பண்ணுங்க போதும்…

கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து அனைவராலும் கூறப்படும் ஒரே பெரிய அறிவுரை கைகளை அடிக்கடி சோப்பு கழுவுங்கள் என்பது தான். ஆனால், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால் வறட்சி ஏற்படக்கூடுமே என்று சிலர் யோசிக்கின்றனர். கண்டிப்பாக வறட்சி ஏற்படக்கூடும் தான். ஆனால், நோய் தொற்றில் இருந்து தப்பிப்பது ஒன்று தான் இப்பொழுது நமக்கு முக்கியம். எனவே, அடிக்கடி கைகளை சோப்பு கழுவுவதை மட்டும் தவிர்த்திடாதீர்கள். கைகள் வறண்டால் அதனை சுலபமாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மென்மையானதாக மாற்றிட முடியும். வாருங்கள் அந்த பொருட்கள் என்னவென்று இப்போது தெரிந்து கொள்வோம்…

கற்றாழை

பொதுவாகவே கற்றாழையை சருமத்திற்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். சருமத்திற்கு அது பல்வேறு வகையில் நன்மையை அளிக்கக்கூடியது. சருமதை மிருவாக்குவதற்கு மிகவும் உதவக்கூடியது. பெரும்பாலும், அனைவரும் வீடுகளிலும் கற்றாழை செடியை பார்க்க முடியும். எனவே, கற்றாழை என்பது அவ்வளவு பெரிய கிடைக்க முடியாத பொருள் ஒன்றும் கிடையாது. கற்றாழையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் அதிகம் உள்ளன. அதனால், கற்றாழை உபயோகிப்பதால் எந்தவொரு அரிப்போ அல்லது வறட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை. கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படக்கூடிய வறட்சியை போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள். இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஜெல்லை கைகளில் தடவிக் கொண்டு படுக்கவும். இவ்வாறு செய்ய கைகளில் வறட்சி என்ற பெயருக்கே இடமிருக்காது. கைகளும் பட்டு போல மென்மையானதாக மாறிவிடும்.

தேன்

சருமம் மற்றும் உடல் ஆரோக்கியம் இரண்டிற்குமே தேன் மிகவும் நன்மையளிக்கக் கூடியது. தினந்தோறுமு் தேனை சிறிது எடுத்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமத்தை மென்மையாக, பொலிவாக மாற்ற தேன் பெரிதும் உதவிடும். சருமத்தில் ஏற்படக்கூடிய காயங்களை விரைந்து குணப்படுத்தவும் தேன் உதவக்கூடியது. வறண்ட கைகளுக்கு தேன் உபயோகித்தால், கைகளில் ஈரப்பதத்தை அது தக்க வைத்திட உதவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →