Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

முகத்தில் அசிங்கமாக தொங்கும் கொழுப்பை சில நாட்களில் போக்கிடலாம்...

முகத்தில் அசிங்கமாக தொங்கும் கொழுப்பை சில நாட்களில் போக்கிடலாம்...

பெண்கள் முகத்தின் அழுகை கூட்டுவதற்கு என்று பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவர். இதை செய்தால் அழகை மேம்படுத்த முடியும் என்றால் யார் அதை செய்து பார்க்க விரும்பமாட்டார்கள். அதிலும், செலவே இல்லாமல் அழுகை மேம்படுத்தி கொள்ளலாம் என்றால் அதை செய்து பார்ப்பதில் தவறேதும் இல்லை. நம்மால் வெளிபுற அழகை மேம்படுத்த முடியும், ஆனால் முகத்தில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பு குறைப்பது என்பது சற்று கடினமானது தான். கன்னங்கள், கழுத்து என கொழுப்பு அதிகமாக சேரும் போது முகம் குண்டாக அசிங்கமாக தெரியும். அவற்றைச் சரிசெய்வது எளிதானது அல்ல. நீங்கள் இதை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி பலன் கிடைக்கவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைப் பின்பற்றி பாருங்கள், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வாழ்வில் சில சில மாற்றங்களை செய்து வாருங்கள்.

முகத்திற்கான உடற்பயிற்சி
முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால், முகப் பயிற்சிகளை செய்யலாம். முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதட்டை குவித்தபடி மேலே தூக்குவது, மீன் வாய், கழுத்தை கீழ் நோக்கி அழுத்துவது, கழுத்தை உள்ளிழுத்த படி மேலே தூக்குவது, வாயில் காற்றை நிரப்பி வைத்திருப்பது போன்றபடியான முக உடற்பயிற்சிகளை செய்யலாம்.

தண்ணீர் நிறைய குடிப்பது

தண்ணீர் குடிப்பது நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது. மேலும், இதன் விளைவு முகத்திலும் நன்கு தெரியும். நிறைய தண்ணீர் குடிப்பதால், முகப் பொலிவை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

உப்பைக் குறைத்து கொள்ளவும்
உங்கள் முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க விரும்பினால் உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ளவும். அதிகப்படியான உப்பை உட்கொள்வது சோடியத்தால் உடலில் நீர் அதிகமாக தேங்குவதாகவும், இந்நிலையில் உடலில் இருந்து நச்சுக்கள் சரியாக வெளியேறாமல், உடல் வீங்கத் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைவாக சேர்த்துக் கொள்வது கொழுப்பைக் குறைக்க உதவும்.

இனிப்புகளை குறைக்கவும்

ரொட்டி, குக்கீகள், பிஸ்கட், பாஸ்தா, பேஸ்ட்ரிகள், பீ்ட்சாகள் மற்றும் இனிப்புகள் போன்றவை உங்கள் முகத்தில் கொழுப்பு சேருவதை அதிகரிக்கச் செய்யும். எனவே, முகத்தில் கொழுப்பு சேருவதை குறைக்க வேண்டுமெனில் அவற்றையெல்லாம் சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

தூக்கம் அவசியம்
உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால், அதிக நேரம் தூங்குவது மிகவும் அவசியம். தூக்கமின்மை மன அழுத்தத்தை அதிகரிக்க செய்வது மட்டுமின்றி, உடல் பருமனுக்கும் வழிவகுக்கிறது. எனவே, என்ன செய்தாலும் போதுமான தூக்கம் பெறுவதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →