Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

முகப்பரு இருந்த இடமே தெரியாமல் போகனும்னா புதினா ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...

முகப்பரு இருந்த இடமே தெரியாமல் போகனும்னா புதினா ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...

காதலர் தினம் வரப்போகிறது. அதற்கு முன்பு உங்கள் முகத்தின் பொலிவை மேலும் கூட்ட வேண்டுமானால், இந்த முறைகளைப் பின்பற்றலாம். ஆமாம், உங்கள் முகத்தின் பொலிவை அதிகரிக்க நீங்கள் அதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சிலவற்றை செய்யலாம். உங்கள் நீட்டில் புதினா இருந்தால் இதனை சுலபமாக செய்திடலாம். புதினாவை முக்கிய பொருளாக வைத்து செய்யக்கூடிய ஃபேஸ் பேக் போடுவதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாக மாறிடும். அதிலும், முகத்தில் இருக்கக்கூடிய முகப்பரு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தழும்புகள் போன்றவை உங்களைத் தொந்தரவு செய்தால், நீங்கள் புதினா ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். இப்போது அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்…

புதினா மற்றும் தேன்

புதினா மற்றும் தேன் ஃபேஸ் பேக்கை செய்ய, ஒரு கைப்பிடி சுத்தமான புதினா இலைகளை ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு சிறிது நீர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். பின்னர், அதனை முகம் மற்றும் கழுத்தில் சம அளவில் தடவிக் கொள்ளவும். சுமார் 20-25 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிடவும். பின்னர், அதை வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வரவும்.

புதினா மற்றும் தயிர்

புதினா மற்றும் தயிர் ஃபேஸ் பேக் முகப்பரு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. ஒரு கைப்பிடியளவு சுத்தமான புதினா இலைகளை ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு அத்துடன், 1 டீஸ்பூன் தயிர் சேர்க்கவும். இப்போது அதில் சில துளிகள் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது தயாரித்த அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிடவும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தி வருவதால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா மற்றும் எலுமிச்சை சாறு

புதினா மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக் செய்ய சில சுத்தமான புதினா இலைகளைக் கழுவி, அவற்றை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். இப்போது அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அதை 15-20 நிமிடங்கள் தடவி ஊற விடவும். நல்ல பலன் கிடைக்க வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதனை செய்து வரவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →