Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

உங்க கழுத்த சுத்தி எதனால கருப்பா மாறுதுனு முதல்ல தெரிஞ்சுக்கோங்க...

உங்க கழுத்த சுத்தி எதனால கருப்பா மாறுதுனு முதல்ல தெரிஞ்சுக்கோங்க...

இன்றைய காலகட்டத்தில், பெண்கள் தங்கள் முகம் மற்றும் கூந்தலுக்கு அதிகப்படியான கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், அதில் சிறிதளவு கூட உடலின் பிற பகுதிகளுக்கு கவனம் செலுத்துவது கிடையாது. தினசரி பராமரிப்பாக இருக்கட்டும் அல்லது அழகுப்படுத்தி கொள்வதாகட்டும் எல்லாவற்றிற்கும் நேரம், பணம் என அனைத்தையும் யோசிக்காமல் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால், முகத்தை ஒட்டியே இருக்கும். கழுத்தை மறந்து விடுகிறார்கள். அதிலும், கழுத்தின் பின்பகுதியை சொல்லவே தேவையில்லை. எப்படியும் முடி மறைத்து கொள்ளும் என்கிற எண்ணத்தில் கழுத்தை முறையாக பராமரிப்பதில்லை.

அதன்விளைவாக, கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்திருக்கும். நாம் என்ன செய்தாலும் அது அவ்வளவு சுலுபமாக அகற்ற முடியாது. பராமரிப்பின்மை தவிர, சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகளாலும் கழுத்தில் கருமையை ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இருப்பினும், அத்தகைய கருமை படர்ந்த கழுத்தையும் எளிய குறிப்புகளைப் பின்பற்றறுவதன் மூலம் நாளடைவில் மறைய செய்திடலாம். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். மேலும், கழுத்து கருமை ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி சொல்ல போகிறோம்…

கழுத்து கருமைக்கான காரணங்கள்

  • மோசமான சுகாதாரம். அதாவது நன்கு தேய்த்து குளிக்காமல் இருப்பது.
  • எரிச்சல் மற்றும் உராய்வு. அணியும் உடைகள் அதிகப்படியாக உராய்வதால் கூட கழுத்து கருமை ஏற்படலாம்.
  • உயர் இன்சுலின் அளவு
  • அகாந்தோசிஸ் நிக்ரிகான்ஸ். தோலின் அடுக்குகளுக்குள் ஆழமான, வெல்வெட் போன்ற படலம் இருப்பது.
  • பிற அடிப்படை தோல் மற்றும் சில மருந்துகளின் நிலைமைகளால் கூட இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

கழுத்து கருமை ஏற்படாமல் எவ்வாறு தவிர்ப்பது?

  • உங்கள் கழுத்து கருமையாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால், உங்களை நீங்களே முழுமையாக தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். காக்கா குளியலை தவிர்த்து நன்கு தேய்த்து குளிக்கவும்.
  • முகம், கை, கால் போலவே கழுத்தின் முன் மற்றும் பின் பக்கங்களிலும் சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துங்கள்.
  • கழுத்து வரையிலான சட்டைகள் / ஆடைகள் அல்லது கனமான அணிகலன் அணிவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை உங்கள் தோலுக்கு எதிராக உராய்வை ஏற்படுத்தும்.
  • தவறாமல் தொடர்ந்து கழுத்தை சுற்றிலும் மென்மையான முறையில் சுத்தம் செய்யுங்கள். அழுத்தி தேய்த்தால் தோல் சேதமடைய வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு கழுத்து பகுதியில் மடிப்புகள் இருக்கக்கூடும். அதனால் கூட கழுத்தில் உராய்வு அதிகரித்து கருமையாக மாறக் கூடும். எனவே, தோல் மடிப்புகளைப் போக்க முதலில் உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டியது அவசியம்.

கழுத்து கருமையைப் போக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள்

  • கிளைகோலிக் அமிலம் மற்றும் ரெட்டினோல் கொண்ட ஏசி கிரீம்களைப் பயன்படுத்தலாம்.
  • கெமிக்கல் பீல் முறையைப் பின்பற்றி கழுத்தின் கருமை அகற்றப்படுகிறது.
  • டெர்மலின்ஃபியூஷன் செயல்முறையில் கழுத்து பகுதியில் படிந்திருக்கும் கருமையை அகற்றலாம்.
  • லேசர் சிகிச்சை முறை மூலமாக கழுத்து பகுதியை வெண்மையாக மாற்றிடலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள முறைகள் மருத்து நிபுணர்களால் செய்யக்கூடியது. முறையாக விசாரித்து, உங்கள் சருமத்தை பரிசோதிக்க பின்னர் இந்த சிகிக்கை முறைகளைப் பின்பற்றுவது உகந்தது.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →