Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

தவறுதலாக கூட இந்த சரும பராமரிப்பு டிப்ஸ்களை வீட்டில் முயற்சித்து பார்க்காதீர்கள்...

தவறுதலாக கூட இந்த சரும பராமரிப்பு டிப்ஸ்களை வீட்டில் முயற்சித்து பார்க்காதீர்கள்...

கோடைகால வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க வேண்டுமென்று தான் அனைவருமே விரும்புவர். இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் இருந்துபடியே, பல்வேறு கோடைகால சரும பராமரிப்பு குறிப்புகளை நம்மால் இணைய தள வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்வதால் அனைவருமே அவற்றை தயங்காமல முயற்சித்து பாரக்க முனைகின்றனர். ஆனால், இணையத்தில் நாம் பார்க்கும் அனைத்தையுமே கண்மூடித்தனமாக நம்பி செய்து விடக்கூடாது என்று சரும பராமரிப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றை பின்பற்றுவதில் மிகுந்த கவனம் தேவை. இந்த கட்டுரையில், அப்படி வீட்டில் தவறியும் செய்துவிட கூடாத அழகு பராமரிப்பு குறிப்புகளைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை படித்து உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்…

கரும்புள்ளிகளை அகற்றுவது
வீட்டில் இருந்தபடியே முகத்தில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகளை நீக்க பலரும் முயற்சிப்பதுண்டு. அதற்கு, பெட்ரோலியம் ஜெல்லியுடன் அவற்றை உருக்கி, அதன் மேல் ஒரு சூடான துண்டைப் போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் சரும துளைகள் மேலும் அடைக்கப்பட்டு, உங்கள் பிரச்சனை மேலும் அதிகரித்திடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இனி இவற்றை வீட்டில் முயற்சிக்க வேண்டாம்.

எலுமிச்சைச் சாறு
எலுமிச்சை சாறு என்பது அனைத்து வகை சரும பராமரிப்பு குறிப்புகளிலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. அதைப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது தான். அவற்றை உங்கள் முகம், அக்குள் அல்லது உதடுகளின் பளபளப்பை அதிகரிக்க செய்ய, இதை ஒரு ப்ளீச்சாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அதை உங்கள் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது. அது கடுமையான பின்விளைவு ஏற்படுத்திவிடும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சருமத்தைத் தற்காலிகமாக ஜொலிக்க வைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது உங்கள் சருமத்தின் இயற்கையான pH அளவை குழப்பி, சருமத்தில் இருக்கக்கூடிய இயற்கையான எண்ணெய் பசையை அகற்றி, மிகவும் வறண்டதாக ஆக்கிவிடும். இதன் காரணமாக, நீங்கள் பேக்கிங் சோடாவை சரும பராமரிப்பு குறிப்புகளில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுவது நல்லது.

வாக்சிங்
உங்கள் முகத்தை வாக்சிங் செய்ய விரும்பினால், இதற்காக நீங்கள் பார்லருக்கு மட்டுமே செல்ல வேண்டும். ஏனெனில் அங்கு தொழில் நன்கு தெரிந்து வல்லுநர்கள் வேலை செய்கிறார்கள். இருப்பினும், வெள்ளை புள்ளிகள், இறந்த சரும செல்கள் அல்லது தோல் பதனிடுதல் போன்ற மேலோட்டமான தோல் பிரச்சனைகளை சரிசெய்ய உங்கள் முகத்தை வீட்டில் இருந்தபடியே வாக்சிங் செய்வது மிக தவறானது.

உதட்டிற்கு இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை தேனுடன் கலந்து உதடுகளில் தடவுவதால் உதடு இயற்கையான சிவப்பு நிறத்தை பெறும் என்று பரவலாக கூறப்பட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள. ஆனால், அது மிக தவறானது. ஏனெனில், உதடுகளின் தோல் மிகவும் மென்மையானது. அத்தகைய உதட்டில் இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிச்சல் அதை மோசமாக சேதப்படுத்தக்கூடும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →