Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

பெண்கள் அணியும் கால் கொலுசுகளில் இத்தனை வகையா?

பெண்கள் அணியும் கால் கொலுசுகளில் இத்தனை வகையா?

உலகெங்கிலும் உள்ள பெண்கள் தங்களைத் தாங்களே அழகாகக் காட்டுவதற்காக வெவ்வேறு பொருட்களையும் ஒப்பனைகளையும் அணிந்து கொள்கிறார்கள். அப்படி உங்களை அழகுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தப்படும் பாரம்பரிய நகைகளில் ஒன்று தான் கொலுசு. ஒரு பெண் கொலுசு அணிந்தாலே அவர்களது காலிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக அமையும். அதிக ஒலி கேட்கும் கொலுசு முதல் சத்தமே கேட்காமல் அழகு சேர்க்கும் கொலுசு வரை பல்வேறு கொலுசுக்களை நாம் பார்த்திருப்போம். அன்றைய காலக்கட்டத்தில் இருந்த மாதிரியாக கொலுசுக்களைக் காட்டிலும், இன்றைய காலக்கட்டத்தில் எண்ணில் அடங்கா வகைகளில் கொலுசுகள் சந்தைகளில் கிடைக்கின்றன. அப்படி, நீங்கள் அறிந்திறாத ஆனால் பெரிதும் விரும்பப்படக்கூடிய கொலுசு வகைகளைப் பற்றி இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறரை காட்டிலும் சிறப்பான கொலுசை அணிய விரும்புவோர் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அணிந்து பாருங்கள், அனைவரது கண்களும் உங்கள் மீது தான் இருக்கும்.

போல்கி கொலுசு (Polki )

போல்கி கொலுசு என்பது தங்கத்தினால் தயாரிக்கப்படக்கூடிய கொலுசு வகை. ஆம், மற்ற கொலுசுகளுடன் ஒப்பிடும்போது, ​​இது மிகவும் வண்ணமயமாகவும், பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். இதை பார்த்ததால் நிச்சயம் யாராக இருந்தாலும் வாங்கி விட வேண்டுமென்ற ஆசையைத் தூண்டும்.

தங்கம்-வெள்ளிக் கொலுசுகள்

பாரம்பரியமாக, தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசுகளை பல ஆண்டுகளாக பார்க்கிறோம். இன்றும், தங்கம் மற்றும் வெள்ளி கொலுசுகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படுகின்றன. இதனுடன், அவற்றில் இடம் பெறும் சிறு சிறு நுண் வடிவங்களும், சலங்கைகளும் அவற்றை மேலும் அழகாக்குகின்றன.

டோ ரிங் கொலுசு (Toe ring)

கால் முழுவதையும் அலங்கரிக்கக்கூடிய கொலுசு வகை தான் இந்த டோ ரிங் கொலுசு. இந்த வகை கொலுசு கணுக்காலில் இருந்து கால் விரல்களுடன் இணைந்து அணியும் படியாக வடிவமைக்கப்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் இந்த வகை கொலுசுகளை பெரிதும் விரும்பி அணிகின்றனர்.

ஆக்ஸிடைஸ்டு கொலுசு (Oxidized)

ஆக்ஸிடைஸ்டு நகைகள் கருப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் உள்ளன. இன்றைய சூழலில், இத்தகைய ஆக்ஸிடைஸ்டு நகைகளை பெண்கள் மிகவும் விரும்பி அணிகின்றனர். அதனால், இவை மிகவும் பிரபலமாக உள்ளன. ஃபேஷனாகவும் மாடர்ன் டிரஸ்களுக்கு ஏற்றபடியும் இந்த கொலுசுகள் இருப்பதால் அதிக அளவில் பெண்கள் பயன்படுத்துகின்றனர்.

அஜ்மேரி பயல் (Ajmeri Payal)

அஜ்மேரி பயல் என்பது ராஜஸ்தானின் பாரம்பரிய கொலுசு வகை. இந்த வெள்ளி கொலுசு பொதுவாக கணுக்கால்களை விட கனமாகவும் அகலமாகவும் இருக்கும். அதனால், இதை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது. ஏதாவது நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.

குந்தன் முத்து கொலுசு

பல வகையான விலையுயர்ந்த ரத்தினங்கள் வழக்கமான குந்தன் கொலுசுகளில் பதிக்கப்பட்டுள்ளன. அதனாலேயே குந்தன் முத்து கொலுசுகள் மிகவும் விலை உயர்ந்ததாகவும் அழகாகவும் இருக்கின்றன. மேலும் இந்த கொலுசுகள் சலங்கைகள் வைத்தும், சலங்கைகள் இல்லாமலும் அணியலாம். தற்போது, இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →