Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைய போகும் ராசிக்காரர்கள்...

கும்ப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைய போகும் ராசிக்காரர்கள்...

வேத பஞ்சாங்கத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் ராசியை மாற்றுவது வழக்கம். அப்படி நடைபெறக்கூடிய கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சில ராசிக்காரர்களுக்கு கிரக மாற்றம் சுபமாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் அமையும். மகிழ்ச்சிக்கும் செல்வத்துக்கும் ஆடம்பரத்துக்கும் செழிப்பிற்கு அதிபதியான சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி காலை 8.37 மணிக்கு மேல் மகர ராசியில் இருந்து சனி பகவானின் ஆதிக்கம் நிறைத்த கும்ப ராசிக்கு செல்கிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், பொதுவாக கன்னி ராசியில் வலுவிழந்தவராகவும், மீன ராசியில் உச்சம் பெற்றவராகவும் கருதப்படுகிறார். எனவே, மகர ராசிக்கு செல்லும் சுக்கிரனால் சில ராசிக்காரர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்ல போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்

சுக்கிரன் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். லாப ஸ்தானமாக கருதப்படும் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். வாகனம் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரிகள் பெரும் லாபம் அடையலாம். பெயர்ச்சி காலத்தில் தொடங்கக்கூடிய பணிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தேங்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நினைத்தற்கு மேல் உங்கள் நிதி நிலை மேலோங்க போகிறது.

மகரம்

சுக்கிரன் மகர ராசியில் இரண்டாம் வீட்டில் இருந்து பெயர்ச்சி ஆகிறார். இது செல்வம், குடும்பம் மற்றும் பேச்சுதிறனின் ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். இந்த நேரத்தில் புதிய வணிக உறவுகள் உங்களைத் தேடி வரும். மகர ராசியை ஆளும் கிரகம் சனி. சனி மற்றும் சுக்கிரன் நட்பு கிரகங்கள் என்பதால் சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் முழு பலனை நீங்கள் பெறப் போகிறீர்கள். மகரத்தில் இருந்து கும்பத்திற்கு செல்லும் சுக்கிரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறார்.

கும்பம்

சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்க போகிறது. உங்கள் கேந்திரம் மற்றும் திரிகோணத்தின் அதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் சஞ்சரிப்பது மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். புது வாகனங்கள் வாங்கலாம். ரியல் எஸ்டேட் வியாபாரிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையுடன் தொடர்புடையவர்கள் இந்த காலகட்டத்தில் பயனடையலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →