Monday, October 12, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் தொழில்நுட்பம் வணிகம் கல்வி & வேலை விளையாட்டு வாகனம் உலகம் குழந்தை வளர்ப்பு உடற்பயிற்சி BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? இந்த சுலபமான வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க…

தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? இந்த சுலபமான வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க…

பருவநிலை மாற்றம் என்பது நமது ஆரோக்கியத்தில் சில மாற்றங்களை கொண்டு வர தான் செய்யும். அதனை எதிர்கொள்ள நாமும் தயாராக இருக்க வேண்டியது அவசியம். பருவகால மாற்றங்களின் போது, தொண்டை வலி, இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும். பெரும்பாலானோருக்கு தொண்டை வலி தான் முதலில் ஆரம்பிக்கும். அவை தான் பின்னர் சளியாகவோ, காய்ச்சலாகவோ அதிகரிக்க கூடும். எனவே, இப்போது தொண்டை வலியை போக்க உதவிடும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து தெரிந்து கொள்ள போகிறோம். மிகவும் சுலபம் தான். ஆனால், இவற்றை செய்வதன் மூலம் தொண்டை வலி விரையில் நீங்கிவிடும்.

உப்பு தண்ணீர்

கால் டீஸ்பூன் கல் உப்பை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். அந்த நீரை உபயோகித்து, 3-4 முறை வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தவன் மூலம் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம். உப்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தான் அதற்கு காரணம்.

மஞ்சள் பால்

மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. அவை, தொண்டை வலிக்கு மிகவும் நன்மையளிக்கக்கூடியது. தொண்டை வீக்கம் கூட குறைந்திடும். இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் தூள் கலந்த பால் குடித்து விட்டு தூங்குவது பல நன்மைகளை அளித்திடும்.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீயில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நாளொன்றிற்கு 2 முதல் 3 முறை இந்த டீ குடிப்பதால் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம். வேண்டுமென்றால், வீட்டிலேயே கூட இந்த டீயை போடலாம். இஞ்சி, பட்டை மற்றும் லிகோரைஸ் ஆகியவற்றை நீரில் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

இஞ்சி

தண்ணீரில் இஞ்சியை சேர்த்து, கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது மிகவும் நல்லது. வேண்டுமென்றால், அந்த கலவையுடன் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம். தொண்டை வலி விரையில் சரியாகி விடும்.

கருப்பு மிளகு

தொண்டை வலி மற்றும் இருமலுக்கு மிளகு மிகவும் ஏற்ற மருந்து என்று தான் சொல்ல வேண்டும். சில மிளகுகளை எடுத்து வாயில் போட்டு சிறிது சர்க்கரையுடம் சேர்த்து மென்று சாப்பிட்டு விட்டு தூங்கினால், நல்ல முன்னேற்றத்தை உணரலாம்.

தேன் மற்றும் எலுமிச்சை

ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதனை குடிக்க தொண்டை வலி பறந்து போய்விடும்.

Share this article

R

Rajasekar

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

…

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

…

…

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,880
தங்கம் (24k)
1 கிராம்
₹14,574
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து: அன்றாட உணவில் சேர்க்க வேண்டியவை! வாசிக்க →