Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியா நிவாரணம் பெற இதை முயற்சி செஞ்சு பாருங்க...

ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியா நிவாரணம் பெற இதை முயற்சி செஞ்சு பாருங்க...

மைக்ரேன் வலி அதாவது ஒற்றைத் தலைவலி என்பது இன்றைய காலகட்டத்தில் பலரையும் ஆட்டிப்படைக்கிறது. இந்த வலியானது தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும். ஒற்றைத் தலைவலி மிகவும் பொதுவான தலைவலி வகைகளில் ஒன்றாகும். ஒற்றைத் தலைவலி ஏற்படுவது நரம்பியல் பிரச்சினை என்றும் கூறுகின்றனர். ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, பொதுவாக வாந்தி மற்றும் ஒலி மற்றும் கடுமையான வலி இருக்கும். ஒற்றைத் தலைவலி ஏற்பட்டதால் பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கும். சாதாரண தலை வலியையே பொறுத்துக் கொள்ள முடியாது. இதனால், எந்தவொரு வேலையும் செய்ய முடியாமல் போகும். பலரும் இது மாதிரியான ஒற்றைத் தலைவலியை போக்க மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். ஆனால், அடிக்கடி மருந்து உட்கொள்வது சரியான பழக்கம் இல்லை. தலைவலி ஏற்படும் போது சில அறிகுறிகளும் தெரியக்கூடும். மேலும், இந்த ஒற்றைத் தலைவலி பிரச்சனையை மருந்து, மாத்திரை எடுத்து கொள்ளாமல் சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் குறைத்திட முடியும். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்

ஒற்றைத் தலைவலி பிரச்சனை குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருக்குமே ஏற்படலாம். உங்கள் தலையில் ஒரு பாதியில் மட்டும் வலி ஏற்பட்டால், அதுவும் மீண்டும் மீண்டும் நடந்தால், உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை வரக்கூடும். இது ஏற்படும் போது ​​பின்வரும் அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம்:

  • உடற்சோர்வு
  • வாந்தி
  • பேசுவதில் சிக்கல்
  • பார்வை இழப்பு
  • உடலில் அதிகப்படியான திரவம் வெளியேறுதல்
  • கடுமையான வலி
  • ஊசி குத்துவது போன்ற வலி உணர்வுகள்

ஒற்றைத் தலைவலியை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்

தனிமையில் இருப்பது

ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது சிறிது நேரம் தனிமையில் இருங்கள். ஒலி, வெளிச்சம் இல்லாத அறையில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உட்காருவது அல்லது சிறிது நேரம் தூங்குவது சிறந்த நிவாரணத்தை வழங்கும். அதனால் வலி குறைவதை நீங்களே உணருவீர்கள்.

மசாஜ்

மசாஜ் செய்வதன் மூலம் ஒற்றைத் தலைவலியில் இருந்தும் உடனடி நிவாரணம் பெறலாம். உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதை குறைப்பதற்கு மசாஜ் செய்வது பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒற்றைத் தலைவலி அதிகரிக்கும் போது, ​​உடனடியாக தலையை நன்கு மசாஜ் செய்யவும். லேசாக கூந்தலை இழுத்தும். அழுத்தி தேய்த்தும் மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவும்.

ஒத்தடம்

ஒற்றைத் தலைவலியின் வலியை உணரத் தொடங்கினால், உடனடியாக உங்கள் நெற்றியின் பின்புறம் மற்றும் கழுத்தில் சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுங்கள். ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலி உணர்வைத் தடுக்கும். அதுவே, சூடு நீர் ஒத்தடம் கொடுக்கும் போது இறுக்கமான தசைகளை தளர்ந்து வலியைக் குறைக்கும். குறைந்தபட்சம் 15-20 நிமிடங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியைக் குறைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீர் ஆகாரம்

கோடை வெயிலின் வெப்பத்தில், அனல் காற்றில் சுற்றுவதும் கூட சில நேரங்களில் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க போதுமான திரவத்தை உட்கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நீரிழப்புக்கு ஆளானால், அது ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும். தண்ணீருடன் பழ ஜூஸ், இளநீர், எலுமிச்சை ஜூஸ், தண்ணீர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றை குடிக்கவும்.

தியானம்

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது தியானம் செய்ய பழகி கொள்ளுங்கள். இதனால், உங்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி பிரச்சனையைத் தடுத்திடலாம். தியானம் என்பது மனதைத் தளர்த்தும் ஒரு சிகிச்சை. எனவே, இதனை தினந்தோறும் செய்வது உங்களை மனஅழுத்தமின்றி வைத்திருக்க உதவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →