Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருள் மழையில் நனைய போகிறார்கள்...

ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருள் மழையில் நனைய போகிறார்கள்...

ஜூன் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்க போகிறது. வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜூன் மாதத்தில், சில ராசிக்காரர்கள் தேவி மகா லட்சுமியின் முழு ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள். மகாலட்சுமி ஆனவர் செல்வத்தின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். மகாலட்சுமியின் அருளால் உறங்கி கொண்டிருக்கும் ஒருவரின் அதிர்ஷ்டத்தையும் எழுப்பும் திறன் கொண்டது. அந்த வகையில், இந்த ஜூன் மாதத்தில் மகாலட்சுமியின் பரிபூர ணஅருளால் செல்வ செழிப்பைப் பெற போகும் ராசிக்காரர்களளைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பதவி உயர்வு, இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் பண வரவு உண்டாக வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் புதிய வேலையைத் தொடங்க இதுவே நல்ல நேரம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் அறிவுசார் நடவடிக்கைகள் உங்களின் வருமான ஆதாரமாக மாறும். அடிக்கடி கோபப்படும் உங்களின் இயல்பில் சிறு மாற்றம் உண்டாகும். இதனால், கோபத்தின் உக்கிரம் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நண்பரின் உதவியால் உங்களின் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கக்கூடும். புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் தீட்டியிருந்தால் இந்த காலத்தில் அது நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு தற்போதைய வேலையில் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சி ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். கல்வி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு அவர்களது தொழில் நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறலாம். குடும்பத்தாரிடம் உங்களுக்கான மரியாதை பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து சிறப்பு ஆச்சரிய பரிசைப் பெறலாம். தொழில் ரீதியாக நீங்கள நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினம், இந்த பயணத்தால் நல்ல வெற்றி கிட்டும்.

மீனம்

இந்த மாதம் மீன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் நல்ல லாபமும் பெற முடியும். இதன் காரணமாக உங்கள் நிதி பக்கம் வலுவாக இருக்கும். தந்தையின் உதவியால் உங்கள் நிதி நிலையில் உயர்வு ஏற்பட்டு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு இந்த நேரத்தில் படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் சுமுகமான உறவைப் பேணவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள பயனடையலாம். உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →