Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

சனி பெயர்ச்சி 2022: இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெறப் போகும் ராசிக்காரர்கள்...

சனி பெயர்ச்சி 2022: இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெறப் போகும் ராசிக்காரர்கள்...

நவகிரகங்களில் முக்கிய இடம் வகிப்பவர் சனிபகவான். இவர் கிரகங்களின் நீதிமான் என்றும். கர்ம வினைகளுக்கான கடவுளாகவும் விளங்குகிறார். அப்படிப்பட்ட சனி பகவானின் பார்வை இடம் இடங்களுக்கு பிரச்சனைகளுக்கு பிரச்சனைகள் வரக்கூடும். இருந்தாலும், ஏழரை சனியின் ஆரம்ப காலமும், இடைப்பட்ட காலமும் கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்கள் வந்தாலும், அதன் இறுதி காலத்தில் அவர் நன்மைகளையே வழங்கிவிட்டு செல்வார். அதாவது சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக்கொள்வது வழக்கம். அப்படி, மகர ராசியில் இருந்துவந்த சனி பகவான் 2022ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிக்காரர்கள் சனி திசையில் இருந்து விடுபட போகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கப் போகிறது என்றும் கூறலாம்.

சனிபகவான் ராசி மாற்றத்தால் நிவாரணம் பெறுபவர்கள்

மூன்று ராசிக்காரர்கள் சனிபகவானின் தீய பார்வையில் இருந்து விடுதலை பெற போகின்றனர். 2022ஆம் ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்கள் தங்களது வாழ்வில் இருந்துவந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற போகிறார்கள். தற்போது மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் திசையில் இருந்து விடுதலையும், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சனியின் இடைப்பட்ட காலமும் நடந்து கொண்டிருக்கிறது.

2022ல் சனி ராசி மாறுவது எப்போது?

29 ஏப்ரல் 2022 வெள்ளிக்கிழமை அன்று சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனியின் இந்த சஞ்சாரம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், அதனால் சிறப்பான பலன்களைப் பெற போகும் ராசிக்காரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மிதுனம்
சனி பகவான் இந்த மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி திசையில் இருந்து விடுதலை கிடைக்க போகிறது. சனி திசை நீக்கியவுடன் உங்கள் வாழ்வில் இத்தனை நாட்களாக இருந்துவந்த கஷ்டங்கள் குறையும். மேலும், உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்தவந்த உத்தியோக ரீதியான தடைகள் நீங்கும். நிதி ஆதாயம் ஏற்படும் சூழ்நிலையும் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கப்படலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தற்போது சனி திசையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், வரும் ஏப்ரல் 29-ம் தேதி சனியின் ராசி மாற்றத்தால் உங்களது ராசிக்கு சனி திசை முடிவுக்கு வருகிறது. இதனால், உங்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பணியில் ஏற்பட்டுவந்த சிரமங்களில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சனியின் ராசி மாற்றம் உங்களுக்கு சுப பலன்களைத் தந்திடும். எனவே, இனி உங்களுக்கு நல்ல காலம் தொடங்க போகிறது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் கடைசி காலம் நடக்கிறது. ஏப்ரல் 29, 2022 அன்று சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு, தனுசு ராசிக்காரர்களுக்கு சனி திசையிலிருந்து முழுவதுமாக விடுதலை கிடைக்க போகிறது. அதன் பிறகு வாழ்க்கையில் பல நல்ல பலன்களைக் காண்பீர்கள். நிதி ஆதாயங்களால் உங்களது கௌரவமும் உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உடல் ரீதியாக அனுபவித்து வந்த துன்பங்கள் விரைவில் நீங்கிடும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பு இத்தனை நாட்களாக கவனிக்கப்படாமல் இருந்ததற்கு தற்போது நல்ல பலனை அளிக்க போகிறது. பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு நிச்சயம் கிடைக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →