Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

18 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்திற்கு செல்லும் ராகு: பெரும் இன்னலுக்கு ஆளாக போகும் ராசிக்காரர்கள்...

18 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்திற்கு செல்லும் ராகு: பெரும் இன்னலுக்கு ஆளாக போகும் ராசிக்காரர்கள்...

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு பகவான் எதிர்க்கும் பிடிபடாத ஒரு மழுப்பலான கிரகமாகவே கருதப்படுகிறார். ராகு என்பவர் மாயையின் கிரகம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட ராகு இப்போது மீண்டும் ராசி மாற்றத்திற்கு தயாராகிவிட்டார். ராகுவின் ராசி மாற்றம் 2022 ஏப்ரல் 12ம் தேதி அன்று நடைபெறுகிறது. ராகுவின் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ளவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த ராசி மாற்றம் பெரும் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. உங்கள் ராசி இதில் உள்ளதாக என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ராகுவின் ராசி மாற்றம் 2022

இந்து நாட்காட்டியின்படி, ராகு ஏப்ரல் 12, 2022 அன்று ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். ராகு எப்போதும் பிற்போக்கு நிலையில் இருக்க விரும்பும் ஒரு கிரகம். அப்படிப்பட்ட ராகு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படப் போகிறது என்பதை இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்

மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் ராகு பகவான், உங்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவார். எனவே, மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். தவறான செயல்களில் இருந்தும் உங்களை நீங்களே திருத்திக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், பணம் தொடர்பான எந்தவொரு ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்திட வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய காலமிது. என்ன நேர்ந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழந்திட கூடாது. உங்களுக்கான நேரம் வரும்போது அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக மாறும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் ராகுவின் இந்த ராசி மாற்றத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ராகுவின் இந்த ராசி மாற்றத்தின் போது உங்களது ராசியில் கேது அமர்ந்திருப்பதால் உங்களுக்கு திடீரென பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சிறிய விஷயங்களைப் பெறுவதற்கு கூட நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கும். முக்கியமாக, ராகுவின் இந்த மாற்ற காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மிகமிக கவனமாக பார்த்து கொள்ளுங்கள். திடீர் உடல்நலக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்தவரை ஜாக்கிரதையாக இருக்க முயலுங்கள்.

மகரம்

ராகுவின் ராசி மாற்றம் மகர ராசியினருக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் திடீர் தடைகள் இருக்கலாம். நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, எந்தவொரு சூழலிலும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த மறவாதீர்கள். உங்களது கட்டுபாடற்ற கோபம் உங்கள் எதிரிகளுக்கு வெற்றி பெற்று கொடுக்கும். அதுதவிர, இந்த காலக்கட்டத்தில் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் முடிந்தவரை கவனம் செலுத்துங்கள். இதன்மூலம், வீண் விரயங்களைக் குறைத்திட முடியும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →