Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

மேஷத்திற்கு செல்லும் ராகுவால் 12 ராசிகளுக்கும் ஏற்பட போகும் மாற்றங்கள்...

மேஷத்திற்கு செல்லும் ராகுவால் 12 ராசிகளுக்கும் ஏற்பட போகும் மாற்றங்கள்...

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு பகவான் எதற்க்கும் பிடிபடாத மழுப்பலான கிரகமாகவே கருதப்படுகிறார். அதுமட்டுமின்றி, ராகு என்பவர் மாயையின் கிரகம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அப்படிப்பட்ட ராகு இப்போது மீண்டும் ராசி மாற்றத்திற்கு தயாராகிவிட்டார். ராகுவின் ராசி மாற்றம் 2022 ஏப்ரல் 12ம் தேதி அன்று நடைபெறுகிறது. வேத ஜோதிடத்தின் படி ராகு தீங்கு விளைவிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. மேஷ ராசிக்கு செல்லும் ராகு பகவான் ஒன்றரை ஆண்டு இந்த கிரகத்தில் இருக்க போகிறார். ராகுவின் பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ளவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த ராசி மாற்றம் பெரும் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே, 2022ம் ஆண்டு மேஷ ராசியில் ராகு சஞ்சரிக்க போகும் ராகு ஒவ்வொரு ராசிக்கு எத்தகைய விளைவுகளை உண்டாக்கப் போகிறார் என்பதைப் பார்ப்போம்…

மேஷம்
மேஷத்திற்கு வருகின்ற ராகு இந்த காலக்கட்டத்தில் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றத்தை வழங்குவார். இருப்பினும், பணத்தை மிக கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. மேலும், உங்கள் தொழிலில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும். திருமணமாகாத மேஷ ராசிக்காரர்கள், தங்கள் துணையைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள், தங்களது வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.

ரிஷபம்
மேஷத்தில் சஞ்சாரிக்கும் ராகு, ரிஷப ராசியின் 12ஆம் வீட்டில் பாதிப்பை உண்டாக்கக்கூடும். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும். திடீர் நிதி சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் வரவு செலவு திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். வேலைவாய்ப்பு மற்றும் இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷப ராசி மாணவர்கள் இந்த காலக்கட்டத்தில் புதிய படிப்பில் சேரலாம். இது, மாணவர்களுக்கு சாதகமான நேரமாகும். உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கைப் பற்றி பேசினால், அமைதியான சூழல் நிலவும். மேலும், ஏதேனும் சிரமங்கள் இருந்தால், பரஸ்பர புரிதல் மூலம் அவற்றை தீர்க்க சிறந்த காலமிது.

மிதுனம்
மேஷத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் பார்வை மிதுனத்தின் 11வது வீட்டில் விழும். எதிர்பாராத செல்வங்களும், நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பண வரவும் உங்களுக்காக காத்திருக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான நேரமாகவும் இருக்கலாம். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நீங்கள் பெரிய ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் உங்கள் முதுகு மற்றும் கால்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் உறவுகளில் பதற்றம் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், உங்கள் வருங்கால துணையைச் சந்திக்க இது நல்ல நேரம்.

கடகம்
மேஷத்திற்கு செல்லும் ராகுவின் பார்வை கடகத்தின் 10 ஆம் வீட்டில் விழும். திருமணமாகாதவர்கள், காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்த இது ஏற்ற காலம். மேலும், விரைவில் உங்கள் திருமணம் நடைபெறும். திருமணமானவர்களுக்கு இது ஒரு நல்ல தருணம். நிதி ரீதியாக, விஷயங்கள் நன்றாக நடக்கும். இருப்பினும், புதிய முதலீடுகளைச் செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், நீங்கள் அமைதியற்றவராக இருக்கலாம். உடற்பயிற்சி மற்றும் யோகா இந்த காலகட்டங்களில் கடுமையான உடல்நல பிரச்சனைகளைத் தடுக்க உதவும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் வரலாம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்
சிம்மத்தின் 9ஆம் வீட்டில் ராகுவின் பார்வை விழப்போகிறது. உங்கள் தொழில் வாழ்க்கைக்கான பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வர வாய்ப்புள்ளது. நீங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். இந்த நேரத்தில், பழைய முதலீடுகள் உங்களுக்கு சிறந்த பலனளிக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் நிதி ரீதியாக பலமடைவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி, தங்கள் காதல் துணையின் கரம் பிடிக்கலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, நீங்கள் சில எலும்பு தொடர்பான பிரச்சனைகளைக் சந்திக்க நேரிடும். உங்கள் உடல்நலத்தைப் பராமரிக்க, சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.

கன்னி
மேஷத்தில் சஞ்சரிக்க போகும் ராகுவின் பார்வை கன்னி ராசியின் 8 ஆம் வீட்டில் விழும். இது உங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களும் இந்த காலக்கட்டத்தில் கவனமாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக உணவுபழக்கத்தில் அதிக அக்கறை தேவை. ​​​​உங்களுக்கு வயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு நிதி ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். சில நீண்ட கால முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் சற்று ஏமாற்றத்தை அளிக்கக்கூடும்.

துலாம்
துலாம் ராசியின் 7ஆம் வீட்டில் விழும் ராகுவின் பார்வை, துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய நிதி ஆதாயங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நீண்ட கால முதலீடுகளும் சாதகமான பலன்களை அளிக்கும். நீங்கள் புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வணிகர்கள் ஏதேனும் புதிய தொழிலைத் தொடங்குவதாக இருந்தால் நன்கு புத்திசாலித்தனமாக யோசனைத்து எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உடலில் சிறிய வலிகள் மற்றும் தொந்தரவுகளால் அவதியுறலாம். மேலும் நீங்கள் பதற்றம் மற்றும் அமைதியின்மையை அனுபவிக்கலாம். காதல் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். மேலும் திருமணமானவர்கள், இந்த பெயர்ச்சி காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6ஆம் வீட்டில் விழும் ராகுவின் பார்வையின் விளைவாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். காயங்கள் ஏற்படாமல் இருக்க, கவனமாக வாகனத்தை ஓட்டுவது அவசியம். நிதி ரீதியாக, எல்லாம் ஒழுங்கான முறையில் இருக்கும். கடன் வாங்க அல்லது நீண்ட கால முதலீடு செய்ய இது ஒரு சிறந்த தருணமாக இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் தற்போதைய வேலையை மாற்றுவதற்கு யோசனை மேலோங்கும். வணிகர்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து அவர்கள் விரும்பும் ஆதரவைப் பெறாமல் போகலாம். ஆனாலும் அவர்களால் போட்டியிட முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் உறவுகள் பதற்றம் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் சில தருணங்களில் நிம்மதியாக உணரலாம்.

தனுசு
மேஷம் செல்லும் ராகுவின் பார்வை தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் விழுகிறது. இதனால், நிதி ரீதியாக, விஷயங்கள் உங்களுக்கு சாதகமான மாறும். இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால், உத்தியோகஸ்தர்களுக்கும் அற்புதமான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆனால், திருமணமாவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையிடம் தங்களை மனதில் உள்ளதை வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரம். மேஷ ராசியில் ராகு சஞ்சரிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கவலைகள் ஏற்படலாம்.

மகரம்
மகரத்தின் 4வது வீட்டில் விழும் ராகுவின் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்க நிலை இருக்கக்கூடும். வழக்கமான உடற்பரிசோதனைகள் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில நிதி சிக்கல்களும் சாத்தியமாகும். இந்த காலகட்டத்தில், யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. பரஸ்பர புரிதல் மற்றும் மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பது உங்கள் உறவைக் காப்பாற்றும். வணிகர்கள் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்
கும்பத்தின் மூன்றாவது வீட்டை பார்க்க போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும். இது உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக நல்வாழ்வை மேம்படுத்தும் திறன் கொண்டது. பணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் புதிய வருமான ஆதாரங்களைத் தேடலாம் மற்றும் நீண்ட கால முதலீடுகளையும் செய்யலாம். வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல விரும்பும் எவருக்கும் இது ஒரு சிறந்த தருணமாக இருக்கலாம். தொழில்முனைவோர் சில இலாபகரமான ஒப்பந்தங்களை மேற்கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் முக்கியமான ஒருவரை நீங்கள் சந்திக்கலாம்.

மீனம்
மீனத்தின் இரண்டாவது வீட்டில் விழும் ராகுவின் பார்வையால் நீண்ட கால முதலீடுகள் நல்ல பலனைத் தரும். எவ்வாறாயினும், கவனத்துடன் எதையும் செய்வது மட்டுமே எப்போதும் விவேகமானது. உங்கள் வணிக கூட்டாளருடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் எரிச்சலூட்டும். ஆனாலும், பரஸ்பர புரிதல் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உங்கள் உணவில் கவனம் செலுத்த இது நல்ல நேரமாக இருக்கலாம். மேலும் நீங்கள் அடிக்கடி உடல்நலப் பரிசோதனைகளை திட்டமிட வேண்டியிருக்கலாம். பெரிய திட்டங்களில் பணிபுரியும் போது, ​​வணிகர்கள் அனைத்து ஆவணங்களையும் முழுமையாக மதிப்பாய்வு செய்வது முக்கியம். அதிக முயற்சி எடுப்பதன் மூலம் நீங்கள் வேலையில் வெற்றி பெறலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →