Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

மாதவிடாய் வலியை 10 நிமிடத்தில் போக்கிடும் அற்புத கை வைத்தியம்!!!

மாதவிடாய் வலியை 10 நிமிடத்தில் போக்கிடும் அற்புத கை வைத்தியம்!!!

One remedy to stop period pain in just 10 minutes: பெண்ணாக பிறந்தவள் மாதந்தோறும் எதிர்கொள்ள கூடிய ஒன்று தான் மாதவிடாய் கால இரத்தப்போக்கு. ஒவ்வொரு மாதமும் பல ஹார்மோன் மாற்றங்களுக்கு பெண்கள் உள்ளாகிறார்கள். இது அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் காலங்களில், பெண்கள் தாங்க முடியாத முதுகுவலி மற்றும் தசைபிடிப்பு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மாதவிடாய் காலங்களில் சில பெண்கள் இடுப்பு மற்றும் அடிவயிற்றில் பயங்கர வலியைச் சந்திக்க நேரிடும். ஏனெனில், மாதவிடாய் காலங்களில் கருப்பை வேகமாக சுருங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக கருப்பையின் உட்புறத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் அழுத்தப்பட்டு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுகிறது. இந்த நிலையில், திசுக்கள் வலியை ஏற்படுத்தும் இரசாயனங்களை வெளியிடுகின்றன.

மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு தொடங்கும் போது, வலியும் அதனுடன் சேர்ந்து தொடங்குகிறது. ஆனால் சில பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே இது நிகழலாம். இது PMS என்று அழைக்கப்படுகிறது. இந்த வலி 48 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

இருப்பினும், சில பெண்கள் இந்த நேரத்தில் அதிகமான வலியை தாங்க வேண்டியிருக்கும். ஆனால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இந்த வலியை வெறும் 10 நிமிடங்களில் நிறுத்தலாம் என்றால் நம்புவீர்களா? அதுவும் உள்ள 2 பொருட்களை வைத்தே வலியை 10 நிமிடத்தில் போக்கிடலாம். இந்த தகவலை ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூர் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணர் ஜூஹி கபூரின் கூற்றுப்படி, மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியத்தை நம்பிக்கையுடன் பின்பற்றலாம். வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை உட்கொள்வதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் வலியிலிருந்து விடுபடலாம் என்று அவர் கூறினார். இந்த ரகசிய செய்முறையை அவர் தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேன் மற்றும் இஞ்சி

மாதவிடாய் வலி ஏற்படும் போதெல்லாம், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி ஜூஸ் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து வலி ஏற்படும் போதெல்லாம் சாப்பிடவும். இதை சாப்பிட்ட சில நிமிடங்களில் வலி குறைந்திடும். அதே நேரத்தில், வலி, தசைப்பிடிப்புகள் மற்றும் வீக்கம் ஆகியவற்றைத் தடுக்க மாதவிடாய் காலத்தில் இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

நீங்க அடிக்கடி நகம் கடிப்பீங்களா? அப்ப உங்க பல்லுக்கு ரொம்ப ஆபத்து…

வெறும் வயிற்றில் இந்த இலையோட ஜூஸ் குடிச்சீங்கனா சிறுநீரக பிரச்சனை வரவே வராதாம்…

அதிகப்படியான வியர்வைக்கு இது கூட காரணமா இருக்கலாம். உடனே இத ட்ரை பண்ணுங்க…

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →