Monday, October 12, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் தொழில்நுட்பம் வணிகம் கல்வி & வேலை விளையாட்டு வாகனம் உலகம் குழந்தை வளர்ப்பு உடற்பயிற்சி BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

புதன் ஒரே ராசியில் 68 நாட்கள் இருக்க போவதால், இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கஷ்ட காலம் தான்...

புதன் ஒரே ராசியில் 68 நாட்கள் இருக்க போவதால், இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கஷ்ட காலம் தான்...

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு 23 நாட்களில் பெயர்ச்சி ஆவார். ஆனால் இந்த முறை புதன் சுமார் இரண்டு மாதங்கள் இதே ராசியில் இருக்க போகிறார். இந்த நேரத்தில், புதன் பிற்போக்கு நிலையில் இருப்பார். ஜோதிட சாஸ்திரப்படி இரண்டு மாதங்களுக்கு ஒரே ராசியில் புதன் இருப்பதால் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மே மாதத்தில், புதன் ரிஷபத்தில் தங்கி, இந்த ராசியில் பிற்போக்கு நிலையில் இருப்பார். பின்னர் அவர் அஸ்தமனம் ஆகி 68 நாட்களுக்கு பிறகு ராசியை மாற்றி இறுதியாக மிதுனத்தில் நுழைவார்.

2022ல் புதன் எப்போது ராசியை மாற்றும்?

மே 10, 2022 அன்று செவ்வாய் மாலை 05:16 மணிக்கு ரிஷப ராசியில் புதன் பின்வாங்குவார். இதற்குப் பிறகு, மே 13 வெள்ளிக்கிழமை, அது 12:56 மணிக்கு நிலை கொள்ளுவார். ஜூன் 03, வெள்ளிக்கிழமை, மதியம் 01:07 மணிக்கு மறைந்து, ஜூலை 02 வெள்ளிக்கிழமை காலை 09:40 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைவார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

ரிஷபம்

புதன் சஞ்சாரத்தின் தாக்கத்தால், ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் நிதி நெருக்கடியைக் கூட சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு சவால்கள் அதிகரிக்கும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் திடீர் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்ட வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தாவிட்டால் திடீர் நிதி நெருக்கடிகளை உங்களை சூழக்கூடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த 68 நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்க போகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திடீர் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரிகள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வணிகர்களுக்கு வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்படும். எல்லா சூழ்நிலைகளிலும் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.

மீனம்

இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது சண்டைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும், இந்த காலக்கட்டத்தில் செலவுகளின் பட்டியலும் அதிகரித்து கொண்டே போகும். முடிந்தவரை, செலவுகளை குறைக்க முயற்சிக்கவும்.

Share this article

R

Rajasekar

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

…

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

…

…

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,880
தங்கம் (24k)
1 கிராம்
₹14,574
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? உழைப்பைப் போற்றும் பாரம்பரியம் வாசிக்க →