Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

2022ன் முதல் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது...

2022ன் முதல் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது...

சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது நிகழும். சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் சந்திர கிரகணம் வரும் 16ம் தேதி நிகழவுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள். அதில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள். இதில், ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் ஒரு பகுதி நேர சூரிய கிரகணம். ஆனால் மே 16ம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாகும். இந்த சந்திர கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்து மதத்தில் கிரகண நிகழ்வு என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமி தினத்தன்று நிகழ்கிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16ம் தேதியன்று நிகழவிருக்கிறது. இது முழு சந்திர கிரகணம் ஆகும். சந்திர கிரகணத்தின் போது இரண்டு சுப யோகங்கள் உருவாக இருப்பதால் இந்த நாளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்த நாள் வைகாசி மாத பௌர்ணமியும் வருகிறது. இந்த நாளில் புனித நதிகளில் நீராடுவதும், தான தர்மம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது.

கிரகண நேரமும், அதன் பலனும்

கிரகணத்தின் போது எந்த ஒரு சுப காரியமும் செய்யக்கூடாது என்பது நம்பிக்கை. கிரகண காலத்தில் கோயில்களின் நடை சாத்தப்படும். இருப்பினும், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் போல, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் இந்தியாவில் பார்க்க முடியாது. சந்திர கிரகணத்தின் போது 2 யோகங்கள் சேர்ந்து வருவதால் இந்த கிரகணம் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இந்து நாட்காட்டியின்படி, ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. அன்றைய தினம் காலை 06.16 மணி வரை வரியன் யோகம் இருக்கும். இந்த யோகத்தில் செய்யும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. மே 16ம் தேதி காலை முதல் மதியம் சுமார் 2.30 மணி வரை, பரிகா யோகம் இருக்கும். இந்த யோகத்தில், இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் சந்திரகிரகணத்தின் போது நல்ல நிதி பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு, செய்யும் தொழிலில் மாபெரும் வெற்றி கிடைக்கும். படித்து முடித்து நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வருகின்ற சந்திர கிரகணம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்க வலுவான வாய்ப்புள்ளது. மேலும், புதிய வருமான ஆதாரங்கள் கூட உருவாகலாம். திருமணமாகாதவர்களுக்கு இந்த நேரத்தில் திருமணம் பற்றிய யோசனை வரலாம். மேலும், நல்ல வரன் தேடி வரவும் வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். தற்போதைய வேலையில் திருப்தி இல்லாவிட்டால், வேலை மாற்றமும் சாத்தியமாகும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →