Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

தொடப்பத்த இந்த இடத்தில் வைச்சா வீட்டில் பணமே தங்காது...

தொடப்பத்த இந்த இடத்தில் வைச்சா வீட்டில் பணமே தங்காது...

வீட்டில் துடைப்பத்தை இப்படி வைக்காதீர்கள், துடைப்பத்தை தாண்ட கூடாது. துடைப்பம் ஏன் இங்கே கிடக்கிறது? நாம் ஒவ்வொருவரும் அவ்வப்போது நம் பெரியவர்களிடமிருந்து ஏதாவது ஒரு திட்டு வாங்கியிருப்போம். ஏன் என்று எப்போதாவது யோசித்தீர்களா? துடைப்பத்திற்கும் வீட்டின் வாஸ்துவிற்கும் சம்பந்தம் இருப்பது நம் முன்னோர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அப்படியெல்லாம் கூறியுள்ளனர். இப்போது நாமும் அதன் பின்னால் உள்ள விஷயங்களை தெரிந்து கொள்வோம்…

வாஸ்து சாஸ்திரம் என்பது ஜோதிடத்தின் மற்றொரு பரிமாணமாகும். இது வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல்களைக் கட்டுப்படுத்துகிறது. வாஸ்து சரியாக இருப்பது நேர்மறை, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தொடர்புடையது. துடைப்பம், சரியான இடத்தில் அல்லது சரியான திசையில் வைக்கப்படாவிட்டால், அது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும். உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அது செல்வம், ஆரோக்கியம், திருமணம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சில எளிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வாஸ்து தோஷத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

தொடைப்பம் வைக்க சிறந்த திசை
வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இருக்கும் இடம் வாஸ்து உடன் தொடர்புடையது. ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு திசைக்கு சாதகமாக இருப்பதால் அதற்கேற்ப வைக்கப்பட வேண்டும். அதேபோல், துடைப்பமும் ஒரு குறிப்பிட்ட திசையில் இருக்க வேண்டியது அவசியம். வாஸ்து படி, துடைப்பம் வைக்க சிறந்த திசை வீட்டின் தென்மேற்கு திசை தான். எனவே, உங்கள் வீட்டில் துடைப்பம் இந்த திசையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைந்து வீட்டில் செல்வ வளம் பெருகும். துடைப்பத்தை வைக்க கூடாத திசை வடகிழக்கு திசையாகும்.

மறைத்து வைக்கவும்
நம்மில் பெரும்பாலோர் நம் வீட்டில் உள் செல்வத்தை மறைத்து வைத்திருப்பது போல? துடைப்பத்தையும் மறைத்து வைப்பதே சிறந்தது. மேலும், துடைப்பத்தை தலைகீழாகவோ, நிற்கும்படியோ வைக்கக்கூடாது. அதை எப்போதும் தரையில் படுக்க போட வேண்டும். இது பண வரவை எப்போதும் சமநிலையில் வைத்திருப்பதைக் குறிக்கும். வாஸ்து தோஷம் ஏற்படாமல் இருக்க, பால்கனி அல்லது மொட்டை மாடி போன்ற திறந்த வெளியில் துடைப்பத்தை வைக்க வேண்டாம். அவ்வாறு செய்வது லட்சுமி தேவியை அவமதிப்பதைக் குறிக்கிறது. எப்பொழுதும், துடைப்பத்தை மறைத்து வைப்பதோடு, பிறர் கால் படும் இடத்தில் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

துடைப்பம் வாங்க சிறந்த நாள்
நீங்கள் வீட்டிற்கு புதிய துடைப்பம் வாங்க போகிறீர்கள் என்றால், வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுவது முக்கியம். ஜோதிடர்களின் கூற்றுப்படி, துடைப்பங்களை மாற்றுவதற்கு சனிக்கிழமை சிறந்த நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ண பக்ஷத்தில் புதிய துடைப்பம் வாங்குவது சுபம். அதுவே, சுக்ல பக்ஷத்தில் இதை வாங்குவது அசுபமானது.

மாலையில் வீடு கூட்டலாமா?
ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஒரு நாளின் முதல் நான்கு மணிநேரம் வீட்டை சுத்தம் செய்ய சிறந்தது. குறிப்பாக, பகலில் கடைசி நான்கு மணி நேரத்தில் வீட்டை சுத்தம் செய்ய துடைப்பத்தைப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்வது எதிர்மறை ஆற்றலை வீட்டில் பரப்பும். ஒரு வேளை, வெகு நாட்கள் வெளியே சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகிறீர்கள் என்றால், வீட்டைச் சுத்தம் துடைப்பத்திற்கு பதிலாப ஈரமான துணையைப் பயன்படுத்தலாம். எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் மாலை வேளையில் துடைப்பதைப் பயன்படுத்தினால், வீட்டின் வெளியே குப்பை அல்லது மண்ணை வீசாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குப்பைத் தொட்டிக்கு அருகில் எங்காவது அதை ஒதுக்கி வைத்து, காலையில் வெளியே எறியுங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →