Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

ஒரே நாளில் சூரிய கிரகணமும், சனி அமாவாசையும் சேர்ந்து வருவதால் நிகழப் போகும் மாற்றங்கள்...

ஒரே நாளில் சூரிய கிரகணமும், சனி அமாவாசையும் சேர்ந்து வருவதால் நிகழப் போகும் மாற்றங்கள்...

2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழவுள்ளது. இருப்பினும், இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். இந்து நாட்காட்டியின் படி, இந்த நாள் வைஷாக் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசை நாளாகும். அதுதவிர, அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், இந்த நாள் சனிச்சரி அமாவாசையாக கொண்டாடப்படும். கிரகங்களின் நிலை காரணமாக, குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் மற்றும் சனிச்சரி அமாவாசை இணைந்து வரும் இதுபோன்ற தினங்களில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

சூரிய கிரகணமும், சனிச்சரி அமாவாசையும்

பஞ்சாங்கத்தின்படி, வைஷாக அமாவாசை ஏப்ரல் 30, சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த அமாவாசை சனிக்கிழமை அன்று வருவதால், சனிச்சரி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சனிச்சரி அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடுவது, தானம் செய்வது, தவம் செய்வது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு தர்ப்பண சடங்குகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சனி அமாவாசை அன்று சனிபகவானை வழிபட உகந்த நாளாகும். இந்த நாளில் சனிபகவானை வழிபடுவது ஏழரை சனியின் பிடி மற்றும் சனியின் திசையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். எனவே, வருகின்ற சனிக்கிழமை அன்று சனிபகவானை வழிபடுவதன் மூலம் அவரது பரிபூரண அருளைப் பெற்றிட பெரிதும் உதவிடும்.

கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

மேஷம்
மேஷ ராசியில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. எனவே, மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த கிரகணத்தின் போது நீங்கள் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்த்திடுவது நல்லது. மேலும், அன்றைய தினம் செய்யும் எல்லா விஷயங்களிலம் மிகவும் கவனமாக இருக்கவும்.

கடகம்
கடக ராசியின் ஆளுமை சந்திரனிடம் உள்ளது. இதுதவிர, இந்த நேரத்தில் சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இணைந்து இருக்கிறார். எனவே, இந்த அமைப்பு கடக ராசிக்காரர்களுக்கு சற்று மனஅழுத்தத்திற்கு ஆளாக்கக்கூடும். எனவே, இந்த நேரத்தில் வீண் எரிச்சல், கோபம் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியான மனதுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மற்றும் அமாவாசை இணைந்து வரும் அமைப்பு மோசமான விளைவே ஏற்படுத்தும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எந்தவொரு பெரிய முதலீட்டையும் செய்ய வேண்டாம். யாரிடமும் பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழகி கொள்ளுங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →