Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

கும்ப ராசிக்கு செல்லும் செவ்வாயால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தான்...

கும்ப ராசிக்கு செல்லும் செவ்வாயால் இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தான்...

2022 ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று கிரகங்களின் அதிபதியான செவ்வாய் ராசியை மாற்றி கும்ப ராசிக்குள் நுழைகிறார். இவர் மே 16 வரை கும்ப ராசியில் இருக்க போகிறார். இதன் பிறகு செவ்வாய் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு என தனி இடம் உண்டு. செவ்வாய் பகவான் ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றின் அதிபதியாக கூறப்படுபவர். செவ்வாய் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ராசிக்காரர்கள் மேஷம் மற்றும் விருச்சிகம். இது தவிர, செவ்வாய் மகர ராசியில் உச்சமாகவும், அதே நேரத்தில் கடகத்தில் பலவீனமாக உள்ளார்.

இப்போது, செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
கும்பத்திற்கு செல்லும் செவ்வாயால் இந்த காலக்கட்டம் உங்களுக்கான நேரமாக இருக்கப்போகிறது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புகழ் மழையில் நனைய போகிறார்கள். வணிகர்கள், பண பரிவர்த்தனைகள் மற்றும் புதிய முதலீடுகள் செய்ய இது ஏற்ற நேரம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்கள் தேங்கி கிடைந்த பழைய கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்திட முடியும். இதனால், நிதி நெருக்கடிகள் நீங்கி உங்கள் நிலை மேலோங்கும். கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகளிடமிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்களை இகழ்ந்தவர்களும், இந்த காலக்கட்டத்தில் உங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

மிதுனம்
செவ்வாய் கும்பத்திற்கு செல்லும் நேரம் உங்களுக்கு நிறைய நிதி ஆதாயம் கிடைக்கலாம். இந்த காலக்கட்டத்தில் செய்யும் பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் அனைத்திலும் நன்மை கிடைக்கும். திருமணமானவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. இதனால் உங்களுக்கு பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்க அதிக வாய்ப்புண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் உங்களுக்கு பெற்று தரப்போகிறது. வணிகர்கள் எதிர்பாராத திடீர் லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவர். தொழில் ரீதியாக உங்கள் கௌரவம் உயரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் விரும்பிய பதவி உயர்வைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் அருமையான வாய்ப்பு கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வேலை மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலமிது.

கும்பம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக வேலைகள் அனைத்து எந்த தடையுமின்றி முடிவடையும். இதனால், பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புண்டு. வெற்றிகளும் உங்களிடம் அடைக்கலம் தேடும். உங்களது சிறப்பான பணி திறனால் பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →