Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

எவ்ளோ மருந்து சாப்பிட்டும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியலையா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க...

எவ்ளோ மருந்து சாப்பிட்டும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியலையா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க...

நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நீரிழிவு நோயாளிகள் மருந்து மாத்திரையை சரியாக உட்கொள்வதோடு, தினசரி உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். இதனால் உடலில் வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு பழச்சாறுகள் பருவது கூட பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளை குடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். உண்மையில், அவை குறைவான அளவு நார்ச்சத்து மற்றும் அதிக அளவு சர்க்கரை கொண்டுள்ளன. இதன் காரணமாக பழச்சாறுக்கு பதிலாக ப்ரஷ் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதோடு, சர்க்கரையும் மிக மிக குறைவு. இருப்பினும், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து ஜூஸ் குடிக்க விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்களை தாராளமாக குடிக்கலாம். ஏனென்றால், இவை உடலுக்கும் நல்லது, சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவிடும். சரி வாருங்கள் அந்த ஜூஸ் வகைகளை இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்வோம்…

பாகற்காய் ஜூஸ்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஜூஸ் மிகவும் நல்லது. இந்த ஜூஸ் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உண்மையில், பாகற்காயில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் ஜூஸ்களில் இதுவும் ஒன்று.

நெல்லிக்காய் ஜூஸ்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த ஜூஸ் தான் நெல்லிக்காய் ஜூஸ். நீரிழிவு நோயாளிகள் இந்த ஜூஸை குடிக்க, முதலில் 2 ஸ்பூன் ஆம்லா சாறு எடுத்து, அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து காலையிலும் மாலையிலும் இதை குடித்து வர வேண்டும். இந்த ஜூஸைத் தொடர்ந்து பருகி வருவதன் மூலம், உடலில் இரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

கீரை சாறு

சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிக அளவு கீரையை சேர்த்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஃபோலேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின்கள் பி, சி, ஈ மற்றும் கே ஆகியவை கீரையில் ஏராளமாக காணப்படுகின்றன. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு கீரை வேக வைத்த தண்ணீரை நீங்கள் பருகலாம்.

பூசணி ஜூஸ்

நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பூசணியிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸை தாராளமாக உட்கொள்ளலாம். இது பெத்தா என்று அழைக்கப்படுகிறது மற்றும் இந்த சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், உடலில் நீரிழப்பு ஏற்படாமலும் தடுத்திடும்.

சுரைக்காய் ஜூஸ்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம். இதை சாப்பிடுவது இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனுடன், உடல் எடையையும் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோயுடன் உடல் பருமன் பிரச்சனையும் இருந்து நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், நிச்சமாக சுரைக்காய் ஜூஸ் குடிக்கவும். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →