Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

கோடையில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நம்ப முடியாத நன்மைகள்!!!

கோடையில் மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நம்ப முடியாத நன்மைகள்!!!

கோடை காலம் வந்துவிட்டது. கோடைகாலம் என்றாலே மாம்பழம் சீசன் எல்லாருக்கும் நினைவிற்கு வரும். அதிலும், யாருக்கு தான் மாம்பழம் பிடிக்காது. மாம்பழ விரும்பிகளுக்கு கோடைகாலம் வந்தாலே பெரும் உற்சாகம் தான். மாம்பழம் பலருக்கு பிடித்தாலும், மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலனோ சிலருக்கு தான் தெரியும். உண்மையில், மாம்பழத்தில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான சத்துக்களாகும். இரத்தம் உறைதல் பிரச்சனையை நீக்குவதோடு, இரத்த சோகை பிரச்சனையில் இருந்தும் நம்மை பாதுகாக்க மாம்பழம் உதவிடும் என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது மட்டுமின்றி மாம்பழம் சாப்பிடுவது எலும்புகளையும் வலுவாக்கும். அதே சமயம், மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த கட்டுலையில் தெரிந்து கொள்வோம்…

இதய பிரச்சனைகளை நீக்கும்
மாம்பழங்களை உட்கொள்வதன் மூலம் இதயம் சிறப்பாக செயல்படும். உண்மையில், மாம்பழத்தில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதயத் துடிப்பையும் சாதாரணமாக வைத்திருக்க உதவுகிறது. இது இதய பிரச்சனைகளைத் தடுக்க பெரிதும் உதவிடும்.

செரிமானம் சீராகும்
மாம்பழத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது. எனவே, மாம்பழம் சாப்பிடுவது செரிமான அமைப்பை நன்றாக வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி, மலச்சிக்கல் பிரச்சனையும் வராது.

நீரிழிவு நோய்
மாம்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழமாகும். இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்காது. எனவே, மாம்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

தைராய்டு
இரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் மாம்பழத்தில் உள்ளன. மேலும், மாம்பழத்தில் உள்ள மெக்னீசியம் தைராய்டு நோய்கள் வருவதைக் கூட அனுமதிக்காது. எனவே, தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் மாம்பழத்தை சாப்பிடலாம்.

சரும பிரச்சனைகளை நீக்கும்
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவை நீக்கக்கூடியவை. அதுமட்டுமின்றி, வயதானவதற்கான அறிகுறிகளை நீக்கும் பண்புகளும் மாம்பழத்தில் உள்ளதால் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, மாம்பழம் சாப்பிடுவதால் பல சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →