Thursday, August 27, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

எந்த க்ரீம் யூஸ் பண்ணாலும் கருவளையம் போகலையா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்களேன்...

எந்த க்ரீம் யூஸ் பண்ணாலும் கருவளையம் போகலையா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்களேன்...

சிலரது முகத்தைப் பார்த்தால், கண்களைச் சுற்றி கருமையான வளையம் அசிங்கமாக தெரியும். இப்படியான கருவளையம் ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனை அல்ல. ஆனால் கண்களைச் சுற்றி கருமையான வளையங்கள் இருப்பது மற்றும் கண்கள் வீங்கி இருப்பது ஒருவரை சோர்வாகவும், ஆரோக்கியமற்றவராகவும் வெளிக்காட்டும். இந்த மாதிரியான கருவளையங்கள் ஏற்படுவதற்கு தூக்கமின்மை, நீண்ட நேரம் திரையைப் பார்க்க, வயது, மரபணுக்கள் போன்றவை கூட காரணமா இருக்கலாம். இந்த கருவளைய பிரச்சனையைப் போக்க பலர் நிறைய பணம் செலவழித்து க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆனால் எந்த செலவும் இல்லாம வீட்டில் உள்ள சில பொருட்கள வைத்தே கருவளையத்தை சுலபமா போக்கிடலாம். அதற்கு இதை நீங்கள் தவறாமல் தினந்தோறும் செய்து வர வேண்டும். வாருங்கள், கருவளையங்களைப் போக்க உதவும் சில இயற்கை வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

ஐஸ் ஒத்தடம்

சில ஐஸ் கட்டிகளை எடுத்து, அதை ஒரு துணியில் வைத்து, கண்களுக்கு கீழே சில நிமிடங்கள் வைத்திருங்கள். இல்லாவிட்டால் குளிர்ந்த நீரில் நனைத்த துணியையும் கண்களுக்கு கீழே வைக்கலாம். இரண்டுமே ஒரே பலனைத் தரும். ஐஸ் கட்டிகளை கண்களுக்கு கீழே வைப்பது கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் கருவளையங்களை நீக்க உதவும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் அதை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள உட்பொருட்கள், கண் வீக்கம் மற்றும் கருவளையங்களைப் போக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்குறதுல சிறந்தது. அதுக்கு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி சாறு எடுத்து, அந்த சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களின் மேல் 20 நிமிடம் வைத்து எடுத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை பல அழகு பராமரிப்பு பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட கற்றாழையின் ஜெல்லை கண்களைச் சுற்றி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இதே மாதிரி தொடர்ந்து செய்து வந்தா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் சருமத்தில் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவை. அப்படிப்பட்ட பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கண்களைச் சுற்றி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையங்கள் மறைந்து கண்கள் பளிச்சென்று மாறிடும்.

https://www.youtube.com/watch?v=tXm5f4yV82w

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,940
தங்கம் (24k)
1 கிராம்
₹15,687
வெள்ளி
1 கிராம்
₹265

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →