Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

வயிற்று வலியை சுலபமாக போக்க இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்...

வயிற்று வலியை சுலபமாக போக்க இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்...

அவ்வப்போது, நாம் வெளியில் சாப்பிடுகிறோம் அல்லது நமக்குப் பிடித்த உணவை அதிகமாக சாப்பிடுகிறோம். இது நம் வயிற்றில் மோசமான எதிர்வினைக்கு வழிவகுக்கும். வாந்தி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற வலிமிகுந்த விளைவுகளைச் சந்தித்த பிறகு நாம் அதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்து வருந்துகிறோம். இதுபோன்ற லேசான வயிறு வலிக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, வீட்டு வைத்தியம் சில வலியைப் போக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், விரைவாக அதை குணப்படுத்தவும் உதவும். எனவே, வயிற்று வலிக்கு வீட்டு வைத்தியமாக சாப்பிட வேண்டிய முக்கியமான 5 உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்…

இஞ்சி

வயிற்று வலியின் பொதுவான அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி. இந்த இரண்டையும் நாம் சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ளும்போது, நம் உடல் நன்றாக உணர ஆரம்பிக்கும். குமட்டல் மற்றும் வாந்திக்கு ஒரு இயற்கை தீர்வு என்றால் அது இஞ்சி. இஞ்சியை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் சிறந்தது. நீங்கள் அதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இஞ்சி டீ போட்டு கூட குடிக்கலாம். மலச்சிக்கலை எதிர்த்துப் போராடவும் இஞ்சியை தாராளமாக பயன்படுத்தலாம். இஞ்சியில் சிறந்த செரிமான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

சீமை சாமந்தி (Chamomile)

கெமோமில் எனப்படும் சீமை சாமந்தி வயிற்று வலி உட்பட பல நோய்களுக்கான தீர்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பூவானது வாயு, அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பல்வேறு குடல் பிரச்சனைகளைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பூவை பயன்படுத்தி நீங்கள் டீ போட்டு குடிப்பதன் மூலம் வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

புதினா (Peppermint)

IBS எனும் குடல் எரிச்சல் நோயானது, வயிற்று வலி, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட நோயாகும். புதினா இந்த பிரச்சனையைக் குறைக்க உதவும். புதினாவில் உள்ள மெந்தால் குடலில் உள்ள தசைப்பிடிப்பைக் குறைக்கவும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவும். எனவே, வயிற்றுப் பிரச்சனை இருக்கும் போது புதினாவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

பச்சை வாழைப்பழம்

பச்சை வாழைப்பழமானது வயிற்றுப்போக்கின் தீவிரம் மற்றும் கால அளவைக் குறைக்க உதவும். பச்சை வாழைப்பழங்களில் ஒரு சிறப்பு வகை நார்ச்சத்து உள்ளது. இது எதிர்ப்பு மாவுச்சத்து என்றும் அழைக்கப்படுகிறது.
எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து குடலில் ஒரு வித கொழுப்பு அமிலத்தை உருவாக்குகிறது. இது குடல் அதிக தண்ணீரை உறிஞ்சுவதற்கு தூண்டுகிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்று பிடிப்புகள், வலி ​​மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றை போக்க உதவுகின்றன.

தயிர்

வயிற்று வலி டிஸ்பயோசிஸால் ஏற்படலாம். டிஸ்பயோசிஸ் என்பது உங்கள் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையற்ற தன்மையாகும். புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள் இத்தகைய ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும், வாயு, வீக்கம் அல்லது ஒழுங்கற்ற குடல் இயக்கம் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். சாதாரண தயிரில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கிற்கு உதவக்கூடிய பாக்டீரியாக்கள் உள்ளது. அதுமட்டுமில்லாமல், தயிர் சீரண மண்டலத்தோட செயல்பாட்டையும் எளிதாக்குகிறது.

https://www.youtube.com/watch?v=WVcs8OYpDBM

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →